

பிரிட்டன் நான்காவது தேசிய திரைப்பட விழாவில் ‘மெர்சல்’ படத்துக்கு, சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்தது.