பாஜக முன்னிலை: மோடிக்கு விஷால் வாழ்த்து

பாஜக முன்னிலை: மோடிக்கு விஷால் வாழ்த்து
Updated on
1 min read

இந்தியளவில் பாஜக முன்னிலையில் இருப்பதால், பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. பகல் 4:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 338 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.  மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.

இதனால் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில், தமிழகத்தில் எந்தவொரு தொகுதியிலும் பாஜக முன்னிலையில் இல்லை. இது தமிழக பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியளவில் பாஜக வெற்றி குறித்து விஷால் தனது ட்விட்டர் பதிவில், “மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற நரேந்திர மோடி அவர்களுக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in