

விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலைகாரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கொலைகாரன்’. அர்ஜுன், விஜய் ஆண்டனி இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் என்ற மாடல் நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது.
சீதா, நாசர், சத்யன், குரு சோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். இதன் மொத்தப் படப்பிடிப்பும் செட் போட்டு சென்னையில் படமாக்கப்பட்டது.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, வருகிற ஜூன் 5-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு படம் ரிலீஸாகிறது.
இதுதவிர, ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் ‘அக்னிச் சிறகுகள்’, அறிமுக இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் ‘தமிழரசன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.