அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

விக்ரமின் 58-வது படத்தை அஜய் ஞானமுத்து இயக்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கடாரம் கொண்டான்’. ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துவரும் இந்தப் படத்தை, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.

விக்ரமுடன் இணைந்து அக்‌ஷரா ஹாசன், அபு ஹாசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘சாமி ஸ்கொயர்’ படம் போலவே இதிலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் விக்ரம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இமைக்கா நொடிகள்’ அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரமின் 58-வது படம் இது. வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

அடுத்த வருடம் (2020) ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். ‘இமைக்கா நொடிகள்’ படத்தைப் போலவே இதுவும் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கிறது. அதேபோல், இதிலும் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. போஸ்டர் வடிவமைப்பைப் பார்க்கும்போது, பல கெட்டப்களில் விக்ரம் நடிப்பார் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in