ம.நீ.ம வேட்பாளர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: ஸ்ரீப்ரியா கிண்டல்

ம.நீ.ம வேட்பாளர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: ஸ்ரீப்ரியா கிண்டல்
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ததை ஸ்ரீப்ரியா கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் 5 மாவட்டங்களில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று (மே 19) நடைபெற்று வருகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று (மே 18) தேர்தல் பறக்கும் படையினர் அரவக்குறிச்சி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் வீட்டில் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில், எதுவும் சிக்காததால் திரும்பிச் சென்றனர்.

இச்சோதனையை மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “என்ன வேடிக்கை இது! இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே... என்ற பாடல தான் ஞாபகத்திற்கு வருகிறது...தகவல் கொடுத்தவர்களை தேடிப்பார்த்தால் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in