சிஎஸ்கே வெற்றி: இயக்குநர் சி.எஸ்.அமுதன் கிண்டல் ட்வீட்

சிஎஸ்கே வெற்றி: இயக்குநர் சி.எஸ்.அமுதன் கிண்டல் ட்வீட்
Updated on
1 min read

சிஎஸ்கே அணியின் வெற்றி குறித்து இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

12-வது ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக மும்பை அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியைத் தீர்மானிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிய இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் மீண்டும் மும்பை அணியுடன் மோதவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

எப்போதுமே கிண்டல் தொனியில் விமர்சிக்கும் 'தமிழ்ப்படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன், சிஎஸ்கே அணி வெற்றி தொடர்பாக “டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசால், மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. இதனை டெல்லியுடனான வெற்றியை வைத்து தெரிவித்துள்ளார் என்று தெரிகிறது.

மேலும், ஐபிஎல் போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி மும்பை அணி தகுதி பெற்றது. அப்போது, “ரன்னர் கோப்பையைப் பெற வெற்றி பெற்றுள்ள மும்பை அணிக்கு வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பதிவில் சி.எஸ்.அமுதன் குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in