தமிழில் ரீமேக்காகும் தி ப்ரபோஸல்?

தமிழில் ரீமேக்காகும் தி ப்ரபோஸல்?
Updated on
1 min read

விமல் - ஸ்ரேயா நடிக்க, தமிழில் ரீமேக்காகிறது ஹாலிவுட் படமான 'தி ப்ரபோஸல்' எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக த்ரிஷா நடிப்பில் வெளியான 'மோகினி' படத்தை இயக்கியவர் மாதேஷ். அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது தன் அடுத்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை சத்தமின்றி லண்டனில் முடித்துவிட்டுத் திரும்பியுள்ளார் மாதேஷ். இதில் விமல், ஸ்ரேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். 'சண்டக்காரி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம், ஹாலிவுட்டில் வெளியான 'தி ப்ரபோஸல்' படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 'தி ப்ரபோஸல்' படத்தைத் தழுவிதான் மலையாளத்தில் 'மை பாஸ்' என்ற படம் எடுக்கப்பட்டது. ஜீத்து ஜோசப் இயக்கிய அப்படத்தின் நாயகனாக திலீப் நடித்தார். 'தி ப்ரபோஸல்' உரிமையை வாங்கி ரீமேக் செய்கிறார்களா அல்லது 'மை பாஸ்' உரிமையை வாங்கி ரீமேக் செய்கிறார்களா என்பது விரைவில் தெரியவரும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in