பேய்க்கு இங்கு நல்ல நேரம்!

பேய்க்கு இங்கு நல்ல நேரம்!
Updated on
1 min read

‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பாக்யராஜ், கஸ்தூரி, மைம் கோபி, பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “பேயைப் பற்றி பலர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருப்போம். எனக்கு மட்டும் ஒன்றே ஒன்று தோன்றும். பேய் இருப்பது உண்மை என்றால், இந்த நாட்டில் போலீஸ் ஸ்டேஷன் என்பது இருக்காது.

ஒருவரைக் கொலை செய்துவிட்டால், அவர் பேயாக வந்து நிச்சயம் பழிக்குப் பழி வாங்கி கொன்றுவிடுவார். போலீஸ்காரர்களுக்கு வேலையே இருக்காது. அதனால் பேய் என்பது இல்லை என்பது உறுதியாகிறது.

ஆனால், சினிமாவில் பேய் வந்து பழி வாங்குகிற கான்செப்ட்டை மக்கள் குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து ரசிக்கின்றனர்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in