வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும்: வைரமுத்து கருத்து

வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும்: வைரமுத்து கருத்து
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீதியுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. நாடு முழுவதும் 67.11 சதவீத வாக்குகள் பதிவானது. 90.99 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் முக்கியப் போட்டி நிலவி வருகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று (மே 23) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், “இந்தியத் திருநாடே! நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும். அறத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in