‘பேட்ட’ ஸ்டைல் ப்ரமோவுடன் களமிறங்கும் டிடி

‘பேட்ட’ ஸ்டைல் ப்ரமோவுடன் களமிறங்கும் டிடி
Updated on
1 min read

‘எங்கிட்ட மோதாதே’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனுக்கான ப்ரமோ, ‘பேட்ட’ படத்தின் ஸ்டைலில் அமைந்துள்ளது.

சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ‘ஜோடி நம்பர் 1’, ‘அச்சம் தவிர்’ என பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியிருந்தாலும், ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சிதான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

தொகுப்பாளராக மட்டுமின்றி, படங்களிலும் நடித்து வருகிறார் டிடி. தனுஷின் ‘பவர் பாண்டி’, ஜீ.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் டிடி.யின் நடிப்பில் சமீபத்தில் வெளியானவை.

கடந்த சில மாதங்களாக எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்த டிடி, தற்போது மறுபடியும் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார். ஏற்கெனவே வெளியான ‘எங்கிட்ட மோதாதே’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை, டிடி தொகுத்து வழங்குகிறார். முதல் சீஸனையும் அவர்தான் தொகுத்து வழங்கினார். இதன் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘பேட்ட’ படத்தில் ரஜினி பேசும் வசனங்களை, நிகழ்ச்சிக்கு ஏற்றதுபோல் மாற்றிப் பேசியுள்ளார் டிடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in