மே 31-ம் தேதி சிக்கலின்றி வெளியாகுமா கொலையுதிர் காலம்?

மே 31-ம் தேதி சிக்கலின்றி வெளியாகுமா கொலையுதிர் காலம்?
Updated on
1 min read

இந்திப் பதிப்பு மே 31-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ள நிலையில், அதே தேதியில் 'கொலையுதிர் காலம்' வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. யுவன் தயாரிப்பு பொறுப்பிலிருந்து விலகல், இசையமைக்கும் பொறுப்பிலிருந்தும் விலகல், தயாரிப்பாளர் முழுமையாக மாற்றம் என பல்வேறு சிக்கலில் சிக்கியுள்ளது.

மேலும், ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசியதும் சர்ச்சையானது. இதனால் திமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ராதாரவி. நயன்தாராவும் அறிக்கையின் மூலமாக ராதாரவியை கடுமையாகச் சாடினார்.

இந்நிலையில், இப்படத்தின் இந்திப் பதிப்பான 'காமோஷி', மே 31-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது. இதில், தமன்னா, பிரபுதேவா நடித்துள்ளனர். மேலும், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

இதனால், இதே தேதியில் 'கொலையுதிர் காலம்' படத்தினை வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். அதற்குள் இப்படத்தைச் சுற்றியுள்ள அனைத்துச் சிக்கல்களும் முடிவடையுமா? என்பதுதான் அனைவரது கேள்வியாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in