

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஆதித்யா வர்மா' மூலம் அறிமுகமாகிறார்.
ஜூலையில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருந்தார் துருவ் விக்ரம். ஆனால், ட்விட்டர் பக்கத்தில் இவருடைய பெயரில் பல்வேறு போலிப் பக்கங்கள் இருந்தன.
இதனைக் களையும் பொருட்டு தற்போது ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார் துருவ் விக்ரம். @DhruvVikram8 என்ற பெயரில் இணைந்துள்ளவர் இன்னும் எவ்வித ட்வீட்டையும் வெளியிடவில்லை. இவர் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக இணைந்திருப்பதை விக்ரம் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.