

ஆர்.கண்ணன் இயக்கி, தயாரிக்கும் படத்தில், ஹீரோவாக சந்தானம் நடிக்கிறார்.
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. ராம்பாலா இயக்கிய இந்தப் படம், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி ரிலீஸானது. ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் சார்பில் சந்தானம் தயாரித்த இந்தப் படத்தை, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் வெளியிட்டது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சந்தானம். படத்தை இயக்குவதோடு, மசாலா பிக்ஸ் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார் ஆர்.கண்ணன். அவரோடு இணைந்து எம்ஆர்கேபி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த படமாக இது உருவாகிறது. ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க, முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர்.