

பிரதமர் மோடியை, இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் பேட்டி எடுத்ததை மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார் சித்தார்த்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடனான இந்த நேர்காணலில், அரசியல் கடந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிரதமர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இந்த நேர்காணல் நடைபெற்றது. 3 கட்டத் தேர்தல்கள் முடிந்த நிலையில், இந்தப் பேட்டி அரசியல் பேட்டி அல்ல என்று கூறப்பட்டாலும்கூட, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
அரசியல் சார்பு இல்லாத அக்ஷய் குமார் இந்தப் பேட்டியை எடுத்திருந்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதனைக் கிண்டல் செய்தும் சாடியும் வருகின்றனர். இந்நிலையில், எப்போதுமே அரசியல் கட்சியினர் பேட்டிகள், ட்வீட்கள் ஆகியவற்றுக்குப் பதிலடி கொடுத்து வருபவர் சித்தார்த்.
பிரதமர் மோடியை அக்ஷய் குமார் பேட்டி எடுத்திருப்பதற்கு, ”வில்லனாக அக்ஷய் குமார் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளார்” என்று மறைமுகமாகக் கிண்டல் தொனியில் ட்வீட் செய்துள்ளார் சித்தார்த்.