

‘உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘உயர்ந்த மனிதன்’. சிவாஜி கணேசன் படத் தலைப்பான இதில், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அமிதாப் நடிக்கும் நேரடி முதல் தமிழ்ப்படம் இது. தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் உருவாகிறது.
“துணை இயக்குநராகத் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்” என இந்தப் படத்தில் அமிதாப்புடன் நடிப்பது குறித்து பெருமையுடன் கூறினார் எஸ்.ஜே.சூர்யா.
இந்நிலையில், படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
“என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம் இது. நான் ஒருபோதும் காணாத கனவை நினைவாக்கிக் கொடுத்த கடவுள், அப்பா, அம்மாவுக்கு நன்றி. அதைப் பகிர்ந்த ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.