

'காஞ்சனா 3' படம் வெளியான 10 நாட்களில் 130 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் 'காஞ்சனா 3'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படத்தில் கோவைசரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, வேதிகா, ஓவியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 19-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக கடும் எதிர்வினைகளை சந்தித்து வந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பி மற்று சி சென்டர்களில் வசூல் சாதனை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வெளியான 10 நாட்களில் உலகளவில் 130 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் மொத்தமாக சுமார் 55 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
மேலும் 'காஞ்சனா 3' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, லாரன்ஸ் இயக்கவுள்ள அடுத்த தமிழ் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது. இப்படத்தை பெரும் பொருட்செலவில், 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்க லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார்.