பெருமைகளையே பேசுகிறார்கள்: மநீம, நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் கருத்து

பெருமைகளையே பேசுகிறார்கள்: மநீம, நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் கருத்து
Updated on
1 min read

பெருமைகளையே பேசுகிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ''யாரும் தீர்வை நோக்கி நகரவேயில்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள்  சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை.

ஆனால் வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும். யாரை நம்பி மாற்றம் தேடுவது... சாதாரண வாக்காளனாய் எனக்கு தோன்றியது''என்று குறிப்பிட்டு இருந்தார் சேரன்.

"இது தான் உண்மை நிலை" என்று அக்கருத்துக்கு பலரும் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், நாம் தமிழர் கட்சியினர் சிலர் 'எங்களுக்கு வாக்களிக்கலாமே' என்று பதிவிட்டனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மநீம (மக்கள் நீதி மய்யம்), நாம் தமிழர் கட்சித் தலைவர்கள் கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம் தம் பெருமைகளையே பேசுகிறார்கள். தொகுதியில் பங்களிக்கப் போவது வேட்பாளர்கள்தானே'' என்று சேரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in