

புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்துக்கு யுவன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அயோக்யா'. மே 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து எழிலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தயாரித்து, நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஷால். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது இதன் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் விஷால் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் 'இரும்புத்திரை' பாணியில் த்ரில்லர் வகையில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'துப்பறிவாளன் 2' படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஷால்.