மே 1-ல் தேவராட்டம் வெளியீடு: Mr.லோக்கல் வெளியீட்டில் மாற்றம்

மே 1-ல் தேவராட்டம் வெளியீடு: Mr.லோக்கல் வெளியீட்டில் மாற்றம்
Updated on
1 min read

மே 1-ம் தேதி 'தேவராட்டம்' வெளியாவதால், 'Mr.லோக்கல்' வெளியீட்டை மாற்றியமைத்துள்ளது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

'தேவராட்டம்', 'Mr.லோக்கல்', 'தேள்', 'காட்டேரி', 'டெடி', ’மகாமுனி’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வருகிறது. விநியோக உரிமைக்காக கைப்பற்றிய 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தை இன்று (ஏப்ரல் 19) வெளியிட்டுள்ளது.

பல்வேறு படங்களைத் தயாரித்து வருவதால், அதன் இறுதிகட்டப் பணிகள் முடிவதை பொறுத்து வெளியீட்டை திட்டமிட்டு வருகிறது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'Mr.லோக்கல்' படம் மே 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது. ஆனால், இறுதிகட்டப் பணிகளில் சிறுதாமதம் ஏற்பட்டதால் மே 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

'Mr.லோக்கல்' வெளியீட்டுக்குப் பதிலாக, முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவராட்டம்' படத்தை மே 1-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் 2 பாடல்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

'Mr.லோக்கல்' படத்தின் இறுதிகட்டப் பணிகளை முடித்து, விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவும் படக்குழு ஆயுத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in