வன்முறை ஒருபோதும் தீர்வாகாது: இலங்கை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கமல் வேதனை

வன்முறை ஒருபோதும் தீர்வாகாது: இலங்கை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கமல் வேதனை
Updated on
1 min read

வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்று இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கமல் வேதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 215 பேர் உடல்சிதறி பலியானார்கள், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான கமல்ஹான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

மனிதர்களின் கருத்து மோதல்களுக்கு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. இலங்கையில் குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதில் துரிதமாகவும் நடுநிலையுடனும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in