

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கருப்பு, வெள்ளை என நிற வேற்றுமையை மையமாகக்கொண்ட பின்னணியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
பள்ளிப்படிப்பைத் தாண்டாத கண்ணம்மாவும், ‘மிஸ் சென்னை' பட்டம் பெற்ற அஞ்சலி என்ற பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள்தான் கதைக்களம். இவர்களுக்கு இடையே பாரதி என்ற மருத்துவர் கண்ணம்மாவை திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் இறங்குகிறாரா? இல்லையா என்பதை நோக்கி கடந்த பல வாரங்களாக இத்தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
இந்நிலையில் வரும் வாரத்தில் கண்ணம்மாவின் அப்பாவிடம் சென்று பாரதி தனக்கு பெண் கொடுக்க சம்மதமா என்று கேட்டு, திருமண அத்தியாயப் படலத்தை தொடங்கி வைக்கிறார். பாரதியின் இந்தக் கேள்வியால் அவரது குடும்பமும், அஞ்சலியும் அவர்களை சுற்றியுள்ளவர்களும் அடையும் அதிர்ச்சியைப் பின்னணியாகக் கொண்டு அடுத்த சில வாரங்களுக்கு கதை நகரும் என்கின்றனர் சேனல் தரப்பினர்.
இத்தொடரில் பாரதியாக அருண் பிரசாத், நாயகி கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன், அஞ்சலியாக நடிகை சுவீட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.