ஃபேஸ்புக் கருத்தாளர்களை துணிச்சலுடன் அணுகிய பர்மா இயக்குநர்!

ஃபேஸ்புக் கருத்தாளர்களை துணிச்சலுடன் அணுகிய பர்மா இயக்குநர்!
Updated on
1 min read

'பர்மா' ட்ரெயலரைப் பார்த்துவிட்டு, அதைக் காப்பி என்று கருத்திட்ட ஃபேஸ்புக் கருத்தாளர்களை துணிச்சலுடன் அணுகியிருக்கிறார் புதுமுக இயக்குநர் தரணிதரன்.

மைக்கேல், ரேஸ்மி மேனன், அதுல் குல்கர்னி, சம்பத் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் இம்மாதம் 12-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் 'பர்மா'. தரணிதரன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சுதர்சன் இசையமைத்து இருக்கிறார்.

'பர்மா' படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வந்தார் தரணிதரன். படத்தின் ட்ரெய்லர்களுக்கு பலரும் 'கான் இன் 60 செகண்ட்ஸ்' (GONE IN 60 SECONDS) படத்தின் காப்பி என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து இயக்குநர் தரணி தரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "எனது 'பர்மா' ட்ரெய்லருக்கு பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதில் சிலர் இப்படத்தை நான் 'Gone in 60 Seconds' என்ற படத்தில் இருந்து காப்பியடித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

'GONE IN 60 SECONDS' படத்தை இதுவரை பார்க்காதவர்கள், தயவு செய்து பர்மா பஜாரில் உள்ள FINAL DRAFT என்ற டி.வி.டி. கடையில் வாங்கி கொள்ளவும். அங்கு சென்று எங்கள் படத்தின் பெயரைச் சொன்னால் 10% தள்ளுபடி கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in