

சசி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'பிச்சைக்காரன்'. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்கியவர் சசி. முன்பாக 'சொல்லாமலே', 'பூ', 'டிஷ்யூம்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் இருவரும் இணைந்து நடிக்கும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். அபிஷேர் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படம் அக்கா - தம்பி உறவினை புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சசி.
அக்காவாக மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோளும், தம்பியாக ஜீ.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். இதில் லிஜோ மோள் கணவராக சித்தார்த் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் டிராபிக் காவல்துறையில் பணிபுரிபவராகவும் வருகிறார். பைக் ரேஸராக ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.
மேலும், காஷ்மீரா, மதுசூதனன், நக்கலைட் யூ-டியூப் குழுவின் நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.