வாழும் மகேந்திறன்! - மகேந்திரனுக்கு பார்த்திபன் புகழாஞ்சலி

வாழும் மகேந்திறன்! - மகேந்திரனுக்கு பார்த்திபன் புகழாஞ்சலி
Updated on
1 min read

வாழும் மகேந்'திறன்'!  என்று  மகேந்திரன் மறைவுக் குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்திருப்பதாவது:

முள்ளும் மலரும் மரணம்?. இன்னும் நூறு  வருடமாவது வாழும் மகேந்'திறன்'!!! பலரின் மரணம் வருத்தமளிக்கும். சாகுறவரைக்கும் சாதிக்கலையேன்னு...ஆனால் மகேந்திரன் சாரின் புகழ் இன்னும் நூறு வருடங்கழித்தும் சாகாது!

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in