அலாவுதீனின் அற்புத கேமரா பட வெளியீட்டுக்கு தடை: நவீன் அறிக்கைக்கு தயாரிப்பாளர் பதிலடி

அலாவுதீனின் அற்புத கேமரா பட வெளியீட்டுக்கு தடை: நவீன் அறிக்கைக்கு தயாரிப்பாளர் பதிலடி
Updated on
2 min read

'அலாவுதீனின் அற்புத கேமரா' பட வெளியீட்டுக்கு தடை விதித்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் நவீன் விடுத்துள்ள அறிக்கைக்கு தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

‘மூடர் கூடம்’ படத்தைத் தொடர்ந்து நவீன் இயக்கியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்தப் படத்திலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இதற்கான காரண்ண என்னவென்று தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக இயக்குநர் நவீன் அளித்த அறிக்கையில், 'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்துக்கு முன்பாக ஒப்பந்தமான படத்தில் என்ன நடந்தது, அதன் தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் என்ன செய்தார் உள்ளிட்டவற்றை தெரிவித்திருந்தார்.

இயக்குநர் நவீனின் இக்குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது Flash Films  என்னும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன் அப்போது 'மூடர்கூடம்' நவீன் என்பவர் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார். படம் இயக்கி தருவதாக சொல்லி கதையின் பவுண்ட் ஸ்கிர்ப்ட் தருகிறேன் என்று என்னிடம் 45 லட்சம் செக்காகவும், 5 லட்சம் பணமாகவும் பெற்றுக்கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம்   போட்டு அதன் படி நடந்து கொள்வதாக கூறினார்.

ஆனால் ஒப்பந்தத்தின் படி எந்த வகையிலும் நடக்காமல் அமெரிக்கா சென்றுவிட்டார். சுமார் 10 மாதங்கள் கடந்தும் பவுண்ட் ஸ்கிரிப்ட் எழுதி வரவில்லை. ஆனால்  படத்தை முடித்து கொடுப்பதாக கூறினார். அவரது அனைத்து செலவுகளும் எனது தயாரிப்பு  அலுவலகம்  மூலமாகவே செய்யப்பட்டது.

நான் இதன் பிறகு 27.04.2017-ல்  தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக புகார் கொடுத்தேன்  அப்போது பல முறை அழைத்தும் நவீன் வரவில்லை. கடைசியாக ஒருநாள் வந்து விரைவில் பணத்தை திருப்பி தருவதாக கூறிவிட்டு, அதன் பிறகு தொடர்பு  கொள்ளவில்லை. ’மூடர்கூடம்’ என்னும் ஒருபடம் மட்டும்  தான் எடுத்துள்ளார். மற்றபடி ஏற்கனவே ’கொளஞ்சி’ என்ற படம் எடுத்து 2 வருடங்களாகியும் இன்னும் வெளியாகவில்லை. அந்த  தயாரிப்பாளரையும் ஏமாற்றியுள்ளதாக கேள்விப்பட்டேன்.

நான் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட பட விஷயமாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளேன். சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பதை விட்டுவிட்டு அறிக்கை கொடுத்து ஊடகத்தின் மூலமாக இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி திசை திருப்பி இதிலிருந்து விடுபட  திட்டமிடுகிறார்.

ஏற்கனவே பல புகார்கள் அவர்மேல் இருப்பதாக அறிகிறேன். என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு லொகேஷன்  பார்க்க போனதாக கதை சொல்லி ஏமாற்றுகிறார். நான் சட்டபூர்வமாகதான் செயல்படுகிறேன். அதை அவரும் சட்டபூர்வமாக சந்திப்பதை விட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக இது போன்ற போலியான  குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் ஏமாற்றுவதாக கூறுகிறார். 

இவ்வாறு சொர்ணா சேதுராமன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in