

மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அதை மறுத்துவிட்டார் பூஜா ஹெக்டே.
தமிழில் 'முகமூடி' திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே அடுத்து 'ஒக லைலா கோசம்' என்கிற தெலுங்கு படத்தின் மூலம், நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவின் படத்தில் ஆந்திராவிலும் அறிமுகமானார்.
பூஜா ஹெக்டே, தற்போது பாலிவுட்டில் ’மொகன்ஜோ தாரோ’ என்கிற வரலாற்றுப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். லகான், ஜோதா அக்பர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஷுதோஷ் கோவரிகர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தத் திரைப்படத்தில், ரித்திக் ரோஷன் நாயகனாக நடிக்கிறார். யுடிவி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் நடிப்பதனால், இயக்குநர் மணிரத்னம் திரைபடத்தில் நடிக்கும் வாய்ப்பை பூஜா தவறவிட்டுள்ளார். மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்க பூஜாவை அணுகியுள்ளனர். ஆனால், ’மொகன்ஜோ தாரோ’ படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை, வேறெந்த படத்திலும் நடிக்கக் கூடாது என முன்னரே ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால், மணிரத்னம் படத்தில் நடிக்க பூஜா மறுத்துவிட்டார்.