வெறும் 10 லட்ச ரூபாயில் உருவான படம்

வெறும் 10 லட்ச ரூபாயில் உருவான படம்
Updated on
1 min read

நந்தா நடிக்கும் 'ழகரம்' படம் 10 லட்ச ருபாயில் எடுக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் க்ரிஷ் கூறியுள்ளார்.

கவாகேன்ஸ் எழுதிய ப்ராஜக்ட் ஃ என்ற மர்ம நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை புதுமுக இயக்குநர் க்ரிஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நந்தா, ஈடன், விஷ்ணு பரத், சந்திரமோகன், மீனேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஜோ, பரத்வாஜ், பிரின்ஸ் ஆகிய மூவர் ஒளிப்பதிவு செய்ய தரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் க்ரிஷ் கூறுகையில், "ஒரு புதையலைத் தேடி நான்கு பேர் செல்லும் பயணமே கதை. சென்னை, விசாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ,கோயம்புத்தூர் என்று கதை பயணிக்கிறது. 10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுப்பது சவாலான விஷயமாக இருந்தது. இதை சாத்தியப்படுத்தியது நந்தாவின் ஆதரவுதான். அவர் கொடுத்த ஊக்கம்  சாதாரணமானதல்ல. நண்பர்கள் பலர் உதவியுடன் படம் உருவாகியுள்ளது'' என்றார் க்ரிஷ்.

கதிர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாக உள்ளது.

ஹீரோக்களின் சம்பளமே கோடிகளைத் தாண்டும் தமிழ்த் திரையுலகில் வெறும் 10 லட்ச ரூபாயில் ஒரு படமே எடுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in