இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ரஜினிகாந்த் இரங்கல்

இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ரஜினிகாந்த் இரங்கல்

Published on

இலங்கையில் நடைபெற்றுள்ள வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 215 பேர் உடல்சிதறி பலியானார்கள், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in