

ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகா தம்பியாக கார்த்தியும், அப்பாவாக சத்யராஜும் நடிக்கின்றனர்.
கமல், கெளதமி நடிப்பில் ‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர் மலையாள இயக்குநரான ஜீத்து ஜோசப். சிறிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஒரு படத்தைத் தமிழில் இயக்குகிறார்.
இந்தப் படத்தில், பிரதான கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். அவருக்குத் தம்பியாக கார்த்தியும், அப்பாவாக சத்யராஜும் நடிக்கின்றனர். ஜோதிகா - கார்த்தி இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதன்முறை. அதேபோல், கடந்த ஆண்டு (2018) வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் நடித்தார். தற்போது மறுபடியும் அப்பா - மகனாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை, ஜோதிகாவின் சகோதரர் சூரஜ் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.
கார்த்தி தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகை ராஷ்மிகா மண்டன்னா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், காமெடியனாக சதீஷ் நடிக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் அறிமுகமான ‘ரெமோ’ படத்திலும் சதீஷ் தான் காமெடியனாக நடித்தார்.