தனது கதாபாத்திரங்களின் எதார்த்தத்துக்காக எப்போதும் பேசப்படுவார்: மகேந்திரனுக்கு இயக்குநர் அறிவழகன் புகழாஞ்சலி

தனது கதாபாத்திரங்களின் எதார்த்தத்துக்காக எப்போதும் பேசப்படுவார்: மகேந்திரனுக்கு இயக்குநர் அறிவழகன் புகழாஞ்சலி
Updated on
1 min read

தனது கதாபாத்திரங்களின் எதார்த்தத்துக்காக எப்போதும் பேசப்படுவார் என்று இயக்குநர் மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

இயக்குநர் மகேந்திரன் சார். எவ்வளவு படங்கள் என்பது முக்கியமில்லை. எப்படியான தரமான படங்கள் என்பதே முக்கியம். சரியாக வரையறுக்கப்பட்ட தனது கதாபாத்திரங்கள் மூலம் எதார்த்தத்தைக் கொண்டு வந்ததற்காக எப்போதும் இவர் பேசப்படுவார். உங்களுக்கு எனது மரியாதை மற்றும் வணக்கங்கள் சார். ஜான் ரோஷன் சார் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு அறிவழகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in