பிரம்மாண்ட இசை மேடை!

பிரம்மாண்ட இசை மேடை!
Updated on
1 min read

விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் - 6’ இந்த வாரம் இறுதிச்சுற்றை  எட்டுகிறது. நாளை (ஏப்ரல் 21) சென்னை  நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேரடி ஒளிபரப்பாக ‘சூப்பர் சிங்கர்’ இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது.  இதுகுறித்து சேனல் தரப்பினர் கூறியதாவது: கடந்த 2006 -ம் ஆண்டில் ‘தமிழகத்தின் குரல் தேடல்’ எனத் தொடங்கிய இந்நிகழ்ச்சி, 10 ஆண்டுகளைக் கடந்து இசைத் துறைக்கு பல பாடகர்களைத் தந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரீட்சைகளையும் கடந்து வந்து, இறுதிப் போட்டிக்கு தேர்வான போட்டியாளர்கள்  - அஹானா, சின்மயி, அனுஷியா, சூர்யா, ஹ்ரித்திக் மற்றும் பூவையார் ஆவர். இவர்கள் தற்போது அந்த பிரம்மாண்ட மேடையில் பாட தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

‘சூப்பர் சிங்கர் - 6’ சீசனின் நடுவர்களாக பின்னணிப் பாடகர் ஷங்கர் மகாதேவன், பாடகி சித்ரா, பாடகர் எஸ்.பி.பி.சரண் மற்றும் பாடகி கல்பனா அவர்கள் இந்தப் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர். இந்த இறுதிச்சுற்று போட்டியிலும் நடுவர்களாக அவர்களே போட்டியாளர்களை ஊக்கப்படுத்த வருகின்றனர்.   இந்த முறை   நடக்கவுள்ள நேரடி  போட்டியானது  தனித்த இசைச் சுற்றாக நடக்கவுள்ளது.

இசை சுவைஞர்களுக்கு பல சுவாரஸ்யமான இசை விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. டாப் போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இசை விருந்தளிக்க உள்ளனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in