நாயகனாகிறார் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்: கதைகள் கேட்கும் பணி தொடக்கம்

நாயகனாகிறார் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்: கதைகள் கேட்கும் பணி தொடக்கம்
Updated on
1 min read

தமிழ் திரையுலகில் நாயகனாக நடிக்க கதைகள் கேட்டு வருகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்

வியாபார உலகில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது சரவணா ஸ்டோர்ஸ். தி.நகர், பாடி, குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் இருக்கிறது. இதற்காக பிரம்மாண்டமான விளம்பரங்களும் தொலைகாட்சியில் அனுதினமும் திரையிடப்பட்டு வருகிறது.

முன்பு சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில், முன்னணி நடிகர்கள் நடித்தார்கள். ஆனால், சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணனே நடிக்கத் தொடங்கினார். இவருக்கு துணையாக ஹன்சிகாவும் சில விளம்பரங்களில் நடித்தார்.

முதலில் சில விளம்பரங்களுக்கு இணையத்தில் கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால் அவை அனைத்தும் மறக்கப்பட்டு, இப்போது மக்களுக்கு பழகிவிட்டது. தற்போது நாயகனாக முடிவு செய்துவிட்டார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்.

இதற்காக கதை கேட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அவருக்கு பிடிக்கும் கதையில் நடிக்க 2020-ம் ஆண்டு முடிவு செய்துள்ளார். ஆனால், தற்போதே இதன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in