

கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’ திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், அக்டோபர் 2-ம் தேதி மீண்டும் ரிலீஸாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘சங்கராபரணம்’ படத்தின் இயக்குநர் கே. விஸ்வநாத், தயாரிப்பாளர் ஏடித நாகேஸ்வர ராவ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்ட னர்.
இந்நிகழ்ச்சியில் கே.விஸ்வநாத் பேசியதாவது:
35 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ‘சங்கராபரணம்’ படத்தை மீண்டும் நானே எடுக்க நினைத்தாலும் முடியாது. இறைவனின் அருளால் அப்போது இந்தப்படத்தை இயக்கியதாகவே நம்புகிறேன். இனி யாராலும் அந்தப் படத்தை ரீமேக் செய்ய முடியாது. அது ஒரு காவியம்.
இவ்வாறு அவர் பேசினார்.