இந்த சமூகத்துக்கு ஒரு அவமானம் நீங்கள்: ராதாரவி பேச்சுக்கு ராணா காட்டம்

இந்த சமூகத்துக்கு ஒரு அவமானம் நீங்கள்: ராதாரவி பேச்சுக்கு ராணா காட்டம்
Updated on
1 min read

இந்த சமூகத்துக்கு ஒரு அவமானம் நீங்கள் என்று ராதாரவி பேச்சுக்கு ராணா காட்டமாக தெரிவித்துள்ளார்

'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராதாரவியின் பேச்சுக் குறித்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராணா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு மிகச்சிறந்த நடிகையை பற்றி ராதாரவி அருவருப்பான கருத்துகள் கூறியதைக் கேட்டேன். உங்கள் கருத்துகள் உங்கள் அருவருப்பான குணத்தை காட்டுகிறது. பல கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்த அவரது திறனைக் காட்டுகிறது. இந்த சமூகத்துக்கு அவமானம் நீங்கள்.

இவ்வாறு ராணா தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in