என் பகுதி பிடிக்காதவர்களுக்கு, மன்னிக்கவும்: சூப்பர் டீலக்ஸ் மிருணாளினி

என் பகுதி பிடிக்காதவர்களுக்கு, மன்னிக்கவும்: சூப்பர் டீலக்ஸ் மிருணாளினி
Updated on
1 min read

என் பகுதி பிடிக்காதவர்களுக்கு, மன்னிக்கவும் என்று 'சூப்பர் டீலக்ஸ்' மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ள மிருணாளினி தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாகப் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் இப்படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.

இப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் மிருணாளினி. இவர் டப்ஸ்மாஷ் மூலம் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம். தற்போது நாயகியாக 2 படங்களில் நடித்து வந்தாலும், 'சூப்பர் டீலக்ஸ்' மூலமே அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய கதாபாத்திரம் குறித்தும், விமர்சனம் குறித்தும் மிருணாளினி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சூப்பர் டீலக்ஸில் எனது சின்ன பங்குக்காக நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறேன். நன்றி மக்களே. இன்று நான் திரையில் இருக்க நீங்கள்தான் காரணம். உங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். படத்தில் நான் வந்த பகுதி பிடிக்காதவர்களுக்கு, மன்னிக்கவும். அடுத்த முறை இன்னும் சிறப்பாக என் பணியைச் செய்கிறேன்.

இவ்வாறு மிருணாளினி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in