விஜய்யுடன் நடிக்கும் ஷாருக்கான்? - தளபதி 63 படக்குழுவினர் மறுப்பு

விஜய்யுடன் நடிக்கும் ஷாருக்கான்? - தளபதி 63 படக்குழுவினர் மறுப்பு
Updated on
1 min read

'தளபதி 63' படத்தில் விஜய்யுடன் ஷாருக்கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை 'தளபதி 63' என்று குறிப்பிட்டு வருகிறது படக்குழு.

இப்படத்தில் ஷாருக்கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. போலீஸ் கதாபாத்திரம் என்று குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக 'தளபதி 63' படக்குழுவினரிடம் விசாரித்த போது, "இதில் உண்மையில்லை. அப்படியொரு எண்ணமில்லை" என்று தெரிவித்தார்கள்.

'தளபதி 63' படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பூஜை அன்றே, தீபாவளி வெளியீடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in