சினிமா துளிகள் (23/03/2019)

சினிமா துளிகள் (23/03/2019)
Updated on
1 min read

* ‘தேவா’ படத்தில் விஜய்யுடனும், ‘வான்மதி’ படத்தில் அஜித்துடன் நடித்த ஸ்வாதி, நீண்ட வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். தற்போது தெலுங்கில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

* விவேக் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘வெள்ளைப் பூக்கள்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இவருடன் இணைந்து சார்லி, பூஜா தேவரியா, தேவ், பெய்ஜ் ஹெண்டர்சன் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக் இளங்கோவன் இந்தப் படத்தின் இயக்குநர்.

* ஃபிலிம் நியூஸ் ஆனந்தனைப் பற்றி முக்கியப் பிரமுகர்கள் எழுதியுள்ள ‘ஞாபகம் வருதே’ நூலை, நடிகர் சிவகுமார் வெளியிட்டார். அருள்செல்வன் இந்த நூலைத் தொகுத்துள்ளார்.

* இரட்டை இயக்குநர்களான கார்த்திக் - விக்னேஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தை இயக்குகின்றனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில், நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி சாய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக வேதிகா நடிக்கிறார்.

* சிபி சத்யராஜை வைத்து ‘ஜாக்சன் துரை’ படத்தை இயக்கிய தரணிதரன், மறுபடியும் சிபியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். காட்டு இலாகா அதிகாரியாக சிபி நடிக்கும் இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் ஒரு புலி நடிக்கிறது.

* ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை இயக்கிய ராம்பாலா, அடுத்தாக ‘டாவு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சந்திரன், ரெபா மோனிகா ஜான் நடித்துள்ள இந்தப் படத்தில், க்ளைமாக்ஸ் தவிர மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.

* திலீப் நடிக்கும் ‘ஜாக் டேனியல்’ என்ற மலையாளப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார். ஹீரோயினாக அஞ்சு குரியன் நடிக்கும் இந்தப் படத்தை, ஷிபு தமீம்ஸ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 21-ம் தேதி தொடங்கியது.

* பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. பார்த்திபன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், பாலக் லல்வானி மற்றும் பூனம் பாஜ்வா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

* ஓவியா நடிப்பில் ‘காஞ்சனா 3’ மற்றும் ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ என இரண்டு படங்கள் ஏப்ரல் மாதம் ரிலீஸாகின்றன. மேலும், ‘களவாணி 2’ மற்றும் ஆரவ்வுடன் ஓவியா ஆடியுள்ள ‘ராஜபீமா’ படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in