ஜி.ஆர்.கோபிநாத் பயோபிக்கில் சூர்யா: சுதா கொங்காரா இயக்குகிறார்

ஜி.ஆர்.கோபிநாத் பயோபிக்கில் சூர்யா: சுதா கொங்காரா இயக்குகிறார்
Updated on
1 min read

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம், ஜி.ஆர்.கோபிநாத்தின் பயோபிக்கை மையப்படுத்தி உருவாக்கவுள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதில் முதலாவதாக கோடை விடுமுறைக்கு 'என்.ஜி.கே' வெளியாகும் என தெரிகிறது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. இப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனத்தோடு குனித் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அத்தனை பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கவுள்ளார் சுதா கொங்காரா. ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய புத்தகத்தின் உரிமை குனித் மோங்காவிடம் உள்ளது. அதனால் தான் அவர் இப்படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

குனித் மோங்கா தயாரிப்பில் உருவான 'Period: End of Sentence' டாக்குமெண்டரி படம் தான் ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in