

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா. இவர் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜான் பால்ராஜ் மீது சென்னை பரங்கி மலை காவல் துணை ஆணையரி டம் கடந்த வாரம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‘‘ஜான் பால்ராஜ் என் பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னி தேவ்' படத்தில் நடித்தேன். என்னி டம் கூறிய கதைப்படி படத்தை எடுக்காமல் வேறு கதையை பட மாக எடுத்ததால் நான் அப்படத் தில் தொடர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் படத்தின் பெயரை ‘அக்னி தேவி' என்று மாற்றி வெளி யிட்டுள்ளனர். மேலும் எனக்கு பதிலாக ‘டூப்' போட்டும், ‘கிராபிக்ஸ்' செய்தும் படத்தை முடித்துள்ள னர். எனவே, இயக்குநர் ஜான் பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கவுரவச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் தலைமையில் சென்னை காவல் ஆணையரிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அதில், ‘‘பாபி சிம்ஹா கூறிய குற்றச் சாட்டுகளில் உண்மை இல்லை. அவரால்தான் படக்குழு கடுமை யாக பாதிக்கப்பட்டது. எனவே போலீஸார் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.