

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்துக்கு 'சங்கத் தமிழன்' என தலைப்பிட்டுள்ளனர்.
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வந்த 'மாமனிதன்' படத்தை ஒரே கட்டமாக முடித்துக் கொடுத்தார் விஜய் சேதுபதி. யுவன் இப்படத்தை தயாரித்து இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
'மாமனிதன்' படத்தைத் தொடர்ந்து, விஜய் சந்தர் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் விஜய் சேதுபதி. ஹைதராபாத்திரல் தொடங்கப்பட்ட இப்படத்தில் நடிக்க ராஷி கண்ணா, சூரி உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார்கள்.
பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'சங்கத் தமிழன்' என்று பெயரிட்டுள்ளது படக்குழு. இதனை விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவுற்று, விரைவில் சென்னையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு விவேக் -மெர்வின் இசையமைப்பாளர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்து வருகிறது.