முதன் முறையாக இணையும் சிவகார்த்திகேயன் - விவேக்

முதன் முறையாக இணையும் சிவகார்த்திகேயன் - விவேக்
Updated on
1 min read

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜேஷ் இயக்கியுள்ள 'Mr.லோக்கல்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, மித்ரன் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விவேக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. யுவன் சங்கர்ராஜா  இசையமைத்து வருகிறார்.

'ஹீரோ' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கவுள்ள படம், விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படம் மற்றும் ராம்குமார் இயக்கிவரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in