

‘மூடர் கூடம்’ நவீன் இயக்கியுள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மூடர் கூடம்’ படத்தைத் தொடர்ந்து நவீன் இயக்கியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்தப் படத்திலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி.
முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகி நீண்ட நாட்கள் ஆனாலும், இப்போதுதான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 19-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி, அருண் விஜய்யை வைத்து ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார் நவீன். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
மேலும், தனராம் சரவணன் இயக்கத்தில் ‘கொளஞ்சி’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் நவீன். அந்தப் படமும் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது.