

ஆப்பிள் ஐ-டியூன்ஸில் ஷாருக்கான் மற்றும் ரித்திக் ரோஷன் படங்களின் இசைக்கு கடும் போட்டியாக திகழ்த்து வருகிறது 'ஐ' மற்றும் 'கத்தி'.
கடந்த வாரத்தில் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்நோக்கிய 'ஐ' மற்றும் 'கத்தி' படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 'ஐ' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், 'கத்தி' படத்திற்கு அனிருத்தும் இசையமைத்து இருந்தார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், அனிருத்தும் இசையும் தற்போது ஐ-டியூன்ஸில் இந்திப் படங்களுக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறது.
ஷாருக்கானின் 'ஹேப்பி நியூ இயர்' மற்றும் ரித்திக் ரோஷனின் 'பாங் பாங்' ஆகிய படங்களின் இசையினை முதல் இடத்திற்கு வரவிடாமல் 'கத்தி' மற்றும் 'ஐ' ஆகிய படங்களின் பாடல்கள் முதல் இடத்தை பிடித்து வருகிறது.
திங்கள்கிழமை பிற்பகல் 'கத்தி', 'பாங் பாங்', 'ஐ', 'ஹேப்பி நியூ இயர்' என்ற வரிசையில் ஐ-டியூன்ஸில் முதல் நான்கு இடங்கள் இருக்கிறது.