

அய்யாமாரு வந்துட்டாங்க... இங்க பாரு...’ என்று பிரபுதேவா எழுதிய பாடல் வரிகளுக்கான காட்சிகளை மானிட்டரில் பார்த்துக் கொண்டிருந்த ‘எங் மங் சங்’ பட இயக்குநர் அர்ஜுன் பேச ஆரம்பித்தார்.
நடன குரு, நடிகர், இயக்குநர் பிரபு தேவா இப்படத்தில் பாடலாசிரியர் ஆனது எப்படி?
ஒரு பாடலுக்கான டியூனை ரெடி செய்து டம்மி வார்த்தை போடணும்னு உதவி இயக்குநர்கள் கொண்டு வந்தார்கள். அந்த டியூனை கேட்ட பிரபுதேவா உடனே டியூனுக்கேற்ற வார்த்தைகளை ஒவ்வொன்றாக சொன்னார். அவர் டம்மி வரிகளாக சொன்னவை படத்தின் சூழலுக்கு பொருத்தமா இருந்தது. இசையமைப்பாளரும் அதையே ஓகே சொல்லிட்டார். படத்தில் இரண்டு பாடல் எழுதியிருக்கார் பிரபுதேவா.
திடீரென குங்ஃபூ கதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்களே, ஏன்?
குங்ஃபூ மேல் இளைஞர் களுக்கு மோகம் இருந்த 80-களில் நடக்கும் கதை இது. என் சொந்த ஊரான நெய்வேலி பக்கத்தில் அப்போது புரூஸ் லீ படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. உடற் பயிற்சி கூடங்களில் புரூஸ் லீ படங் களை பெரிதாக மாட்டி வைத்திருப் பார்கள். அதையெல்லாம் மைய மாக வைத்து யோசித்தபோதுதான் ‘எங் மங் சங்’ கதை உருவானது.
‘எங் மங் சங்’ பெயர் காரணம் என்னவோ?
புரூஸ் லீ மேல் இருக்கும் ஈடு பாட்டால் ஒரு பிரச்சினையை குங்ஃபூ மூலம் தீர்ப்பதற்கு பிரபு தேவா, ஆர்.ஜே.பாலாஜி, கும்கி அஸ்வின் மூன்று பேரும் குங்ஃபூ கற்றுக்கொள்கிறார்கள். மூவரும் மாஸ்டர் எங், மாஸ்டர் மங், மாஸ் டர் சங் என்று பெயர் மாற்றிக்கொள் கிறார்கள். அதுதான் படத்தின் தலைப்பு. அப்படி என்ன பிரச் சினைக்கு அவர்கள் குங்ஃபூ கற்றுக் கொள்கிறார்கள்? அந்தப் பிரச் சினை தீர்ந்ததா என்பதுதான் கதை.
லட்சுமி மேனன் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாகப் போகிறார் என்று நியூஸ் வந்ததே, இதில் எப்படி நடிக்கிறார்?
படிப்பைக் காரணம் காட்டிதான் லட்சுமி மேனன் வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். நடனத்தில் பெரி தாக சாதிக்கப் போகும் முயற்சி களில் இருப்பதாகவும் அறிந்தேன். மற்றப்படி கல்யாணச் செய்தியில் உண்மையில்லை. கதைச் சொல்லி 50 நாட்கள் கழித்துதான் படப்பிடிப் புக்குப் போனோம். கதை சொன்ன போது இருந்ததைவிட எடையை குறைத்து ‘கும்கி’ படத்தில் பார்த்த மாதிரியே நடிக்க வந்தார். இப்படத் தில் யமுனா என்கிற கிராமத்து பெண் கேரக்டர்ல நடித்திருக்கிறார். இந்தப் படம் அவங்களுக்கு கூடு தல் சிறப்பு சேர்க்கும்.
80-களில் நடக்கும் கதை என்கிறீர் கள். இந்தப் படத்துக்கு பிரபுதேவா எப்படி பொருத்தமாவார்?
இளமையான ஒரு ஹீரோவைத் தேடினோம். பிரபு தேவா நடித்த ‘தேவி’ படத்தின் போஸ்டர் டிசைன் பார்த்தபோது, இப்போதும் அவர் அவ்வளவு இளமையுடன் இருப்பது தெரிந்தது. அவரிடம் இந்தக் கதையை சொன்னபோது நடிக்க சந்தோஷமாக சம்மதித்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரையும் அவர்தான் அழைத்து வந்தார். பொதுவாக அவர் நடித்த படங்கள் ஜனரஞ்சகமாக இருக்கும். இந்தக் கதைக்கு அவர் அவ்வளவு பொருத்தமாக அமைந்தார். அது மட்டுமில்லை, இந்தப் படத்தின் திரைக்கதையையும் அவர் அழகாக மெருகேற்றிக் கொடுத்தார்.
வெளி இயக்குநர்கள் படத்தில் நடிக்காத தங்கர்பச்சானை உங்க படத்துக்குள் இழுத்து வந்திருக்கிறீர் களே, எப்படி சம்மதித்தார்?
முதல் முறையாக தங்கர் பச்சான் சார் இன்னொரு இயக்குநர் படத் தில் நடிக்கிறார். இதில் பிரபுதேவா வின் அப்பாவாக நடித்துள்ளார். படத்தில் மிக முக்கியமான கேரக் டர் அவருடையது. அவரிடம் பிரபு தேவா இந்தக் கதையை சொல்ல, ‘நான் நடிச்சு தர்றேன்’ என்று சொல்லி அத்தனை அன்போடு வந்தார்.
குங்ஃபூ படம் என்பதால் சண்டைக் காட்சிகள் வலுவாக இருக்குமா?
படத்தில் கதையைச் சார்ந்து வருகிற மூன்று சண்டைக் காட்சி களும், தனியாக கிளைமாக்ஸில் ஒரு சண்டை காட்சியும் இருக்கு. இந்தப் படத்தில் சில்வா மாஸ் டரையும் இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு படத்தில் சண்டைக் காட்சிகள் இருக்கும்.
‘யாரோடு சண்டையிட பயம்?’ என்று புரூஸ் லீயிடம் கேட்ட போது, ‘‘ஆயிரம் சண்டை முறை களில் பயிற்சி எடுத்தவரைவிட, ஒரே ஒரு சண்டை முறையை ஆயிரம் தடவை பயிற்சி எடுத்தவரோடு சண் டையிட பயம்’’ என்றார். அதுதான் இந்தப் படத்தின் மையப் புள்ளி.
நமக்கு எல்லா விஷயமும் தெரிந் திருந்தால்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பது கிடை யாது. ஆனால், நமக்கு தெரிந்த ஒரு விஷயத்தை முழுதாகவும் முறை யாகவும் தெரிந்து கொண்டாலே ஜெயிக்கலாம் என்பதை மையமாக வைத்துதான் இந்தக் கதையைத் தயார் செய்துள்ளேன்.