அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்யும் தர்மபிரபு டீஸர்: இணையத்தில் வைரல்

அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்யும் தர்மபிரபு டீஸர்: இணையத்தில் வைரல்
Updated on
1 min read

அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்து இணையத்தில் வெளியாகியுள்ள 'தர்மபிரபு' படத்தின் டீஸருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

விமல், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கன்னிராசி'. இப்படத்தை இயக்கியுள்ளார் முத்துக்குமரன். 'கன்னிராசி' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் யோகி பாபு, கருணாகரன், ராதாரவி, மனோபாலா, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தர்மபிரபு'  படத்தை இயக்கத் தொடங்கினார் முத்துக்குமரன். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

நேற்று (மார்ச் 29) மாலை 6 மணியளவில் 'தர்மபிரபு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இதில் வரும் வசனங்கள், சமீபகால தமிழக அரசியலையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்யும் வகையில் உள்ளன.

'பூலோகத்தில்தான் தகுதியில்லாதவர்களுக்கு பதவி கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது எமலோகத்திலுமா', 'இங்கு எல்லோரும் தகுதியுடன்தான் பதவியில் இருக்கிறார்களா', 'அம்மா போனால் சின்னம்மா, அய்யா போனால் சின்னய்யா...', 'அக்கவுண்டில் பணம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு, ஆடைகளாகப் போட்டுக் கொண்டிருக்கிறாரா' ஆகிய வசனங்கள் 'தர்மபிரபு' டீஸரில் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மோடி அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் பணம் போடுவேன் என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொன்னார். இப்போது அவர் கலர் கலராக உடைகளை மாற்றிக் கொண்டு, வெளிநாடு சுற்றுப்பயணம் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதையே வசனமாக்கி பிரதமர் மோடியை மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளனர்.

மேலும், அம்மா, சின்னம்மா போன்ற வசனங்கள் அனைத்துமே அதிமுக கட்சியினரைக் கிண்டல் செய்யும் விதமாக அமைந்துள்ளன. எமதர்மன் சம்பந்தப்பட்டக் கதையாக இருந்தாலும், அதில் சமீபகால அரசியல் விஷயங்களைக் காமெடியாக வைத்து வெளியாகியுள்ள இந்த டீஸர், இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in