நயன்தாராவின் ‘ஐரா’ மார்ச் 28-ம் தேதி ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

நயன்தாராவின் ‘ஐரா’ மார்ச் 28-ம் தேதி ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ படம், மார்ச் 28-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ மூலம் பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமானார்.

நயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மார்ச் மாதம் 28-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in