"அபிநந்தன் என்ற வீரத்திருமகனை எப்போது காக்கும் இந்தியா?" - நடிகர் பார்த்திபன்

"அபிநந்தன் என்ற வீரத்திருமகனை எப்போது காக்கும் இந்தியா?" - நடிகர் பார்த்திபன்
Updated on
1 min read

எப்போது இந்தியா அபிநந்தன் என்ற வீரத்திருமகனை மீட்கும் என நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகக் கேட்டுள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தியது. 

இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இரு இந்திய  விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது. இதில் ஒருவர் விமானி காமாண்டர் அபிநந்தன்.

அபிநந்தனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் கோரிக்கைகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் பார்த்திபன் "கணவனின் கடமையும் தந்தையின் வீரமும், மனைவியின் மனதையும் மகனின் கண்களையும், ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் எத்தனை நிமிடங்கள் காக்கும்? அதற்குள் காக்குமா இந்தியா அந்த வீரத்திருமகனை?" என்று கவித்துவமாக தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in