

தமிழில் உருவாகும் 'பிரேக்கிங் நியூஸ்' என்ற சூப்பர் ஹீரோ படத்தின் நாயகனாக ஜெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'பார்ட்டி', 'நீயா 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருபவர் ஜெய். தற்போது கோபி நயினார் இயக்கி வரும் 'கருப்பர் நகரம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து சூப்பர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜெய்.
'பிரேக்கிங் நியூஸ்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று (பிப்.21) சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ஷங்கர் படங்களில் கிராபிக்ஸ் வல்லுநராக பணிபுரிந்த ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கவுள்ளார்.
ராகுல் பிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பிரபலமான பானு நடிக்கவுள்ளார். தேவ்கில், ராகுல் தேவ், மந்த்ரா பேடி, இஷா கோபிகர், ராதாரவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சமூகத்தில் நடக்கும் அநீதிகள், பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு ஒரு சாமானிய இளைஞன் சந்திக்கும் பிரச்சினையை இப்படம் பேசும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் 90 நிமிடங்கள் முழுக்க கிராபிக்ஸ் பின்னணி கொண்ட காட்சிகளே இப்படத்தில் இடம்பெறவுள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது படக்குழு.