Mr.லோக்கல் ரீமேக் அல்ல: இயக்குநர் ராஜேஷ்
'Mr.லோக்கல்' திரைப்படம், தெலுங்குப் படத்தின் ரீமேக் அல்ல என்று இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'Mr.லோக்கல்' என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.
படத்தின் பெயர் வெளியானவுடன், தெலுங்கில் வெளியான 'நேனு லோக்கல்' படத்தின் ரீமேக் இது என்று பலரும் தெரிவித்தார்கள். நானி நடிப்பில் வெளியான அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இயக்குநர் ராஜேஷிடம் கேட்டபோது, " 'Mr.லோக்கல்' என்னுடைய கதை. எந்தவொரு படத்தின் ரீமேக்கும் அல்ல" என்று தெரிவித்தார்.
நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, 'யூ டியூப்' புகழ் ஹரிஜா உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
'Mr.லோக்கல்' படத்துக்குப் பிறகு, மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.
