

இந்தியா விமானப் படை விமானி அபினந்தனை தனது சகோதரர் என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இரு இந்திய விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது. இதில் ஒருவர் விமானி காமாண்டர் அபிநந்தன்.
அபிநந்தனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் கோரிக்கைகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "விங்க் கமாண்டர், எனது சகோதரர் அபினந்தன் வர்தமானுக்கு என் வணக்கங்கள். மிகவும் பெருமையாக உள்ளது. உறுதியுடன் இருங்கள். மொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. நீங்கள் பத்திரமாக திரும்ப எங்கள் பிரார்த்தனைகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.